பாஜக தமிழக விவசாய அணி மாநில தலைவர் G.K. நாகராஜன் கோவையிலிருந்து சென்னைக்கு அங்ககச் சான்றிதழ் துறையை மாற்றும் அறிவிப்பினை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு.!!

கோவை: பாஜக தமிழக விவசாய அணி மாநில தலைவர் G.K. நாகராஜன் கோவையிலிருந்து சென்னைக்கு அங்ககச் சான்றிதழ் துறையை மாற்றும் அறிவிப்பினை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார்.



கோவை: பாஜக தமிழக விவசாய அணி மாநில தலைவர் G.K. நாகராஜன் கோவையிலிருந்து சென்னைக்கு அங்ககச் சான்றிதழ் துறையை மாற்றும் அறிவிப்பினை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார்.

மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பது:-

கோவையில் இயங்கிவரும் விதைச்சான்று மற்றும் அங்ககச் சன்றிதழ் துரையின் தலைமையிடத்தை சென்னைக்கு மாற்ற இருப்பதாக, நடந்து வரும் சட்ட மன்றத்தில் நடைப்பெற்ற வேளாண்துறை விவாதத்தில், வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிர்ந்திருந்தார்.



இந்நிலையில், 2,000-க்கும் மேற்பட்ட சான்றிதழ் பெற்று விவசாயம் செய்து வரும் விவசாயிகளை இந்த முடிவானது பெரிதும் பாதிக்கும் அபாயம் ஏற்படும்.

தினமும், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அலுவலகத்தை தொடர்புக்கொண்டு ஆலோசனை பெற்றுவருகிறார்கள்.

மேலும் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் காய்கறிகள், இயற்கை முறையில் விளைவுக்கப்பட்டு சான்றிதழ் பெற்ற விவசாயிகளுக்கு இலாபகரமான விலையும் கிடைத்துவருகிறது.

அதுபோல் தினமும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்கனிக் சான்றிதழ் அலுவலகத்தை தொடர்புகொண்டு ஆலோசனை பெற்றுவருகிறார்கள்.

இந்நிலையில் சென்னைக்கு அலுவலகத்தை மாற்றுவது விவசாயிகளை பல்வேறு போக்குவரத்து சிரமங்களால் ஆர்கனிக் சான்றிதழ் பெறாமல் இயற்கை விவசாயம் முடங்கும் நிலை ஏற்படும்.

எனவே, கோவையில் இயங்கிவரும் ஆர்கனிக் சான்றிதழ் வழங்கும் அலுவலகத்தை சென்னைக்கு மாற்றக்கூடாது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



எந்த நடவடிக்கையும் எடுக்காத பச்சத்தில் 21-ஆம் தேதி அலுவலகம் காக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார் G.K. நாகராஜன்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...