கோவை: வராத நொய்யல் ஆற்று நீருக்கு, அதில் வரும் கழிவுநீரை உபரிநீர் என்று கூறுவது சரியாகாது என முன்னாள் அதிமுக அமைச்சர் செ.ம.வேலுச்சாமி அரசுக்கு ஆலோசனை கூறினார்.

நொய்யல் ஆறு கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் வழியாக பாயக்கூடிய நதி, போதுமான மழை இல்லாததால் நொய்யல் ஆற்றுப் பகுதி குளம், குட்டைகள், அணைகள், காய்ந்து குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் ஏற்பட்டு உள்ளது.
நொய்யல் ஆற்றுப் பாசனத்திற்கு ஆண்டுதோறும் வரி கட்டும் விவசாயிகளின் அசாதாரண சூழ்நிலையை புரிந்து குளம், குட்டை, அணைகளுக்கு நீர் வந்தால் போதும் குடிநீர் ஆதாரமும் கால்நடைகளுக்கும் குடிநீர் கிடைக்கும் என்று நல்ல எண்ணத்துடன் கோவை மாநகராட்சி கழிவு நீரை குளம் குட்டைகளில் நிரப்பி அப்பகுதியில் வாழ்கின்றனர்.
2001- 2006 நான் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டபோது முப்பது ஆண்டுகளுக்கு மேல் காய்ந்த குளம் குட்டைகளுக்கு மாநகர கழிவு நீரை நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீர் உயர்ந்து குடிநீர், கால்நடை குடிநீருக்கும் பயன்பெறும் வகையில்,
கோவை மாவட்ட ஆட்சியர் எத்தனை நாட்கள் எந்த குளத்திற்கு எவ்வளவு நீரை நிரப்பலாம் என்று உத்தரவிட்டு இன்றுவரை இருக்கும் நீரை பகிர்ந்து அதன் மூலம் குடிநீர் ஆதாரம் கிடைத்து வருகிறது.
நொய்யல் ஆற்று நீர் குளம் குட்டைகளை நிரப்பவே போதுமானதாக இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில், நொய்யல் ஆற்று சட்ட விதிகளுக்குப் புறம்பாக நொய்யல் ஆற்றில் வராத நீருக்கு உபரி நீர் என்று கூறி எடுக்க முயற்சிப்பது தவறாகும்.
மேலும் உபரி நீர் கொண்டு செல்ல கேட்கும் பகுதியில் அரசின் வாய்க்கால் பாசனம் உள்ளது.
இதில் இருக்கும் பாசனத்தை விரிவுபடுத்தி கூடுதல் தண்ணீரை பெற முயற்சிப்பதை விட்டுவிட்டு குடிநீர் ஆதாரமாக விளங்கும் குளம் குட்டையில் இருந்து பயன்படுத்தும் நீரை எடுக்க முயற்சிப்பது தவறான செயல்.
வசதியானவர் தங்கள் சுய தேவைக்கு சமூக அமைப்புகள் என்ற பெயரில் முறைகேடாக வசூல் செய்துகொண்டு அரசு நீர் விநியோகத்தை திசை திருப்பும் செயலாகும்.
இதற்கு அரசு ஒத்துழைப்பு கொடுக்காமல் இப்பகுதி மக்களுக்கான நீராதாரத்தை பாதுகாக்க வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.