பெண்கள் பாதுகாப்போடு இருக்க காவல்துறையின் SOS செயலியைப் பயன்படுத்துங்கள்; வால்பாறையில் பெண்கள் சட்ட விழிப்புணர்வு கருத்தங்கில் வலியுறுத்தல்!

கோவை: சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து புகார் அளிப்பதற்கு வசதியாக காவல்துறையின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள SOS செயலியைப் பெண்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என வால்பாறையில் நடைபெற்ற பெண்கள் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.


கோவை: சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து புகார் அளிப்பதற்கு வசதியாக காவல்துறையின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள SOS செயலியைப் பெண்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என வால்பாறையில் நடைபெற்ற பெண்கள் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை, வரதட்சணைக் கொடுமை என பல வழிகளில் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் விதமாக பல பெண் காவல் நிலையங்கள் செயல்பட்டுவந்தாலும், துணிச்சலுடன் யாரும் சென்று புகாரினை அளிப்பதில்லை. இந்நிலையில் தான் பெண்களுக்கு எதிராக குற்றங்களைத் தடுப்பதற்கு பல தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி தீர்வு காணும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் தான் கோவை மாவட்டத்தைச்சேர்ந்த பெண்கள் எவ்வளவு துணிச்சலுடன் இருக்க வேண்டும், பிரச்சனை ஏற்பட்டால் எப்படி காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்பது குறித்து சட்ட விழிப்புணர்வு கருத்தரங்களை மேற்கொள்ளக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து ஒவ்வொரு பகுதிகளிலும் பெண்களுக்காக விழிபபுணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுவருகிறது. அந்த வரிசையில் இன்று வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.



இந்த கருத்தரங்கிற்குத் தலைமையேற்று சிறப்புரையாற்றிய வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம், இன்றைய சூழலில் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் எனவும், குறிப்பாக மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றி தைரியமாக காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என கூறினார். இதோடு வரதட்சணைக் கொடுமை, பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வேறு பல இடையூறுகள் பற்றியும் தகவல் தெரிவிக்க வசதியாக காவல் துறையின் SOS செயலி நடைமுறையில் உள்ளது. எனவே இதனைப்பதிவிறக்கம் செய்து எந்நேரத்திலும் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்கலாம் எனவும் கூறினார்.

மேலும் பெண் குழந்தைக்கான அவசர உதவி எண் 181 எண்ணையும், 1098 கட்டனமில்லா எண்ணையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ராபின்சன் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...