கோவை: “ஒரு ரூபாய் கூட உங்களை ஸ்டைல் ஆக்கிவிடுவோம்“, என்று பெரிய சலூன் கடைகள் விளம்பரம் செய்து வருவதால் சாதாரண சலூன் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது என என கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

மனிதனை அழகாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பது அவர்களின் சிகை அலங்காரம் தான். யாருக்கு எந்த ஸ்டைல் பொருத்தமாக இருக்கும் என்பதைக்ன கணித்து அவர்களை மேலும் அழகாகக் காட்டுவதில் சலூன் தொழிலாளர்களின் சேவை அளப்பெரிதாக உள்ளது. ஆனால் இன்றைய மாடர்ன் உலகத்திற்கு ஏற்றவாறு கோடிக்கணக்கில் செலவு செய்து பல புதிய பார்லர்கள் திறக்கப்பட்டுவருகின்றனர். இதனால் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக அவ்வப்போது பல விளம்பர யுக்திகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அப்படித்தான் சென்னையில் ஒரு கார்ப்பரேட் சலூன் கடையில் ஒரு ரூபாய்க்கு முடி வெட்டுவதாக பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஆனால் கடைக்குள் நுழைந்து 3 ஆயிரம் ரூபாய் வரை பில் போடுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மக்கள் அதிகளவில் பாதிப்பினைச் சந்திக்கின்றனர். மேலும் இதுப்போன்ற விளம்பரங்களால் சிறிய அளவிலான சலூன் கடைகளுக்கு மக்கள் வருவதில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சலூன் தொழிலளார்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஏற்கனவே கொரோனா காலத்தில் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,கார்ப்பரேட் நிறுவனங்களின் பொய்யான பிரச்சாரத்தில் எங்களை வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே சிறிய அளவில் சலூன் கடை வைத்து நடத்துபவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொய்யான பிரச்சாரம் மேற்கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தினர் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், கொரோனாவால் ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். இந்த நிலையில் சலூன் தொழிலில் கார்ப்பரேட்டுகள் நுழைந்து பொய்யான விளம்பரங்களை செய்துவருகிறது. இதனை நம்பி மக்கள் அதிகளவில் அங்கு செல்கின்றனர். இதனால் நாங்கள் மிகுந்த பாதிப்பைச் சந்தித்து வருகிறோம். எனவே தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலையிட்டு இப்பிரச்சனை தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதல் அமைச்சரும் எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.