கோவை: கோவை கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வரும் ஆகஸ்ட் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை தமிழகத்தில் கொண்டாட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
ஆனால், விநாயகர் சதுர்த்தி விழா நாளில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வருகிற 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாளில் தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்கள் வீடுகளில் சிலை வைத்தால் அவர்கள் நீர்நிலைகளில் கரைக்க தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.