கோவை: கோவையில் இன்று காலை சாலையைக் கடக்க முயன்ற ஒரு பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாகனங்கள் அந்தப் பெண் மீது ஏறியதால் உடல் சிதைந்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கோவை பீளமேடு அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் இன்று காலை ஒரு பெண்ணின் உடல் சாலையில் சிதைந்த நிலையில் கிடந்தது.
கிழக்கு போக்குவரத்து புலனாய்வு காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, காவல்துறை விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண்ணிற்கு 50-வயது இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால் அவர் யார் எனத் தெரியவில்லை. அவர் அந்தப் பகுதியில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது தெரியவந்தது.
போக்குவரத்து புலனாய்வு காவல்துறை வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.