கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அன்பான அறிவுரை வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் உள்ள பல நீர்நிலை படுகைகளில் அபாயகரமான மற்றும் குளிக்கத் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் விளையாட்டுத்தனமாகவும், கேளிக்கையாகவும் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறியும், ஆபத்தை உணராமலும் குளிக்கச் சென்று தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
இவ்வாறு அருவி, ஆறு, கால்வாய், குளம், குட்டை, கிணறு மற்றும் அணை போன்ற நீர் நிலைகளில் அபாயத்தை உணராமலும் விளையாட்டுத்தனமாகவும் குளிப்பதற்காகச் சென்று (2019-100 பேர், 2020-94 பேர், 2021-61 பேர்) தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர்.

மேற்படி அபாயகரமான பகுதி மற்றும் குளிக்கத் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் தங்களது விலை மதிப்பற்ற உயிரைக் காப்பதற்காகக் கோவை மாவட்ட காவல்துறையினருக்கு அப்பகுதியில், அதிகமாக ரோந்து பணியில் (Beat Patrol)ஈடுபடவும் மற்றும் எச்சரிக்கை பதுகைகள் வைக்கப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
விலை மதிப்பற்ற உயிரை விளையாட்டாக எண்ணாதீர்!!!
அபாயகரமான பகுதியை அறிவீர்!!!
விலைமதிப்பற்ற உயிரைக் காப்பீர்!!!