கோவை: கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு, கோவை மாவட்ட கட்டுமான, அமைப்பு சாரா அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நன்றி தெரிவித்துள்ளது.
கோவை: கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு, கோவை மாவட்ட கட்டுமான, அமைப்பு சாரா அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நன்றி தெரிவித்துள்ளது.
கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குக் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு வாழ்வுரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் மானியக் கோரிக்கை அமைந்தது மிகுந்த வரவேற்புக்குரியது. தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கோவை மாவட்ட கட்டுமான, அமைப்பு சாரா அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட கட்டுமான, அமைப்பு சாரா தொழிற் சங்க பொதுச் செயலாளர் முருகேசன், கோவை, திருப்பூர் மாவட்ட கட்டிடத் தொழிலாளர் முன்னேற்றச் சங்க பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி, சங்க பொதுச் செயலாளர் மனோகரன், சங்கத் தலைவர் சிரஞ்சீவி கண்ணன் உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அவர்களிடம் நேரிலும் தொ.மு.ச., பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் எம்பி, அவர்களின் பரிந்துரையின் பேரில் நாங்கள் வழங்கிய கோரிக்கை மனுவில், முக்கிய அம்சமாக 2021 தமிழக தொழிலாளர் நலத்துறை பட்ஜெட் உரையில் தொழிலாளர்களின் முறை அறிந்து அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் விதமாக பல்வேறு அறிவிப்புகளைத் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.
கல்வி நிதியை ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி வரை நலவாரிய நிதியை உயர்த்தி வழங்கியும், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகத் தொய்வடைந்து கிடந்த தொழில்நுட்ப கல்வியான ஐடி மற்றும் பாலிடெக்னிக் மற்றும் இன்ஸ்டியூட் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு தொழிற்கல்வி முன்னுரிமை கொடுத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கு விபத்து மரணம் நிதி ஒரு லட்சம் என்பதை இரண்டு லட்சம் ஆகவும் கட்டுமானம் மற்றும் ஆட்டோ தொழிலாளர் குடும்பத்திற்கு இயற்கை மரணம் நிதி 20 ஆயிரம் என்பதை 50 ஆயிரமாகவும், அமைப்புசாரா தொழிலாளிக்கு இயற்கை மரணத்திற்கு ஒரு லட்சம் என்பதை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஆகவும் உயர்த்தி தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும் இயற்கை மரணம் நிதி 20 ஆயிரம் என்பது 30 ஆயிரம் என்றும் விடுபட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களை வாரியத்தில் சேர்க்கும் விதமாகச் சீர்செய்து தொலைநோக்கோடு வாரியம் விரிவாக்கம் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாததையும் பட்ஜெட்டில் இந்த நிதிநிலை பற்றாக்குறையான நேரத்திலும் கடந்த 10 ஆண்டுக்கால ஆட்சியில் செய்யாததை அறிவித்து.
இந்த 120 நாட்களில் துவண்டு கிடந்த நல வாரியத்தைச் சீர்செய்து ஐம்பதாயிரம் கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தமிழக முதல்வர் வழங்கியுள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் சிரமப்பட்டு ஆன்லைனில் பதிவு மற்றும் புதுப்பித்தல் செய்ததை பல்வேறு காரணம் காட்டி கடந்த ஆட்சியில் ரத்து செய்ததை மீண்டும் புத்துணர்வு கொடுத்துப் பதிவு மற்றும் புதுப்பித்தலைப் பதிவு செய்த நாளிலிருந்து தொடரும் வகையில் எங்களது கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று நடைமுறைக்குக் கொண்டு வந்ததால் தமிழகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் கட்டுமானத் துறையில் புதிய புரட்சி ஏற்படும் வகையில் இருபத்தி ஏழு ஆயிரம் சதுர அடி வரை உள்ளூரிலேயே எளிய முறையில் அப்ரூவல், மேலும் லே-அவுட் பிரிப்பதிலும் எளிமை, கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த அறிவித்து எங்கள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வாழ்வுரிமை மீட்டெடுக்கும் விதமாகச் செயல்பட்டு வரும் தமிழக முதல்வருக்கும் மாண்புமிகு தொழிலாளர் துறை அமைச்சர் அவர்களுக்கும் தொழிலாளர்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.