கோவை: பொள்ளாச்சியில் பள்ளி மாணவர்கள் 4-பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பொள்ளாச்சியில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரண்டு பேருக்கும், புரவிபாளையம் உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவருக்கும், பனிக்கம்பட்டியில் தனியார்ப் பள்ளி மாணவர் ஒருவருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, வகுப்பறைகளுக்குச் சீல் வைத்து பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் நெருக்கமாக இருந்த நபர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.