கோவை மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அரசு பஸ் ஜப்தி செய்ய வந்த கோர்ட் ஊழியர்களை பஸ் டிரைவர் கண்டக்டர்கள் தடுத்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு.!!

கோவை: கோவை மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அரசு பஸ் ஜப்தி செய்ய வந்த கோர்ட் ஊழியர்களை பஸ் டிரைவர் கண்டக்டர்கள் தடுத்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அரசு பஸ் ஜப்தி செய்ய வந்த கோர்ட் ஊழியர்களை பஸ் டிரைவர் கண்டக்டர்கள் தடுத்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையைச் சேர்ந்தவர் சிவராமன். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2015 ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு சேலத்தில் இருந்து கோவைக்கு அரசு பஸ்ஸில்(TN 30 N 1379)பயணித்துள்ளார்.

அந்த பஸ் சேலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை சேர்ந்தது. கண்டக்டர் டிக்கெட் எடுக்க கூறியபோது அரசு தனக்கு வழங்கியுள்ள பாஸ் காண்பித்துள்ளார். அதை ஏற்க மறுத்த பஸ் கண்டக்டர் நடராஜன் சிவராமனை பஸ்ஸிலிருந்து இறங்கி விட்டார்.

இதனால் மிகுந்த மன வருத்தம் அடைந்த அரசு போக்குவரத்து கழக முன்னாள் ஊழியர் சிவராமன், இதுகுறித்து சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.

ஆனால், அதற்கு நிர்வாகம் தரப்பில் இருந்து பதில் கிடைக்கவில்லை. இதனால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிபதி பாதிக்கப்பட்ட சிவராமனுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்க சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு பிறப்பித்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் கோர்ட் உத்தரவின்படி சிவராமனுக்கு தொகை வழங்கப்படவில்லை. இதனால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது.



இன்று காலை கோர்ட்டு ஊழியர்கள் கோவை மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நின்று கொண்டிருந்த சேலம் கோட்டத்தை சேர்ந்த கோவை - சேலம் இடையே இயக்கப்படும் அரசு பஸ் (TN 30 N 1585) ஜப்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரைவர் மணிகண்டன் மற்றும் நடத்துநர் மாதேஸ்வரன் ஆகியோர் கோர்ட் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் கோர்ட்டு ஊழியர்கள் திரும்பினர்.

இதனிடையே சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கோவை கோர்ட்டுக்கு விரைந்தனர். இச்சம்பவத்தால் சேலத்திலிருந்து கோவை வந்த அரசு பஸ் மீண்டும் சேலத்திற்கு இயக்கப்படாமல் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் வெகு நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...