ஆறு மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் திறப்பு - பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை.!!

கோவை: ஆறு மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால், பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.



கோவை: ஆறு மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால், பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் கோவை குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மூடப்பட்டது. இந்நிலையில் தொற்று பாதிப்பு கோவை மாவட்டத்தில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இன்று முதல் கோவை குற்றாலம் வரச் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால் கோவை, திருப்பூர் என பல்வேறு பகுதிகளிலிருந்து காலையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வர துவங்கினர்.



குற்றாலத்திற்குச் செல்வதற்கு முன்னதாக உள்ள சோதனைச் சாவடிகளில் பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்தல் முக கவசம் அணிந்து உள்ளனரா? என்பதை உறுதி செய்த பின்னரே உள்ளே செல்ல வனத்துறையினர் அனுமதித்தனர்.



இதையடுத்து, சுழற்சி முறையில் சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அருவியில் குளிக்கச் செல்வோர் 30 நிமிடங்கள் மட்டுமே உள்ளே இருக்க அனுமதிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டு அடுத்ததாகக் காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் அருவி உள்ள பகுதி அருவிக்குச் செல்லும் பாதைகளில் நீண்ட நேரம் நிற்கப் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.



அதேபோல் ஒரே இடத்தில் குழுமி இருக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வனத்துறையினர் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். அதேபோல் வெளிமாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ் உள்ளதா என்பதையும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில் காலை 9 மணி முதல் 9.30 மணி வரை 150 பேரும், அதேபோல் 10.30 முதல் 11 மணி 12 முதல் 12 .30 பிற்பகல் 1.30 முதல் 2 மணி வரை தலா 150 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...