கோவை: கிணத்துக்கடவு அருகே உணவகத்தில் மது குடிக்க அனுமதித்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது தாமரைக்குளம் பகுதி கோவை சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் மது குடிக்க அனுமதி வழங்கப்படுவதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த உணவகத்தில் உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் சோதனை நடத்திய போது உணவகத்தால் சட்டவிரோதமாக மது குடிக்க அனுமதி வழங்கியது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறை மது குடிக்க அனுமதித்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்(30) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.