கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கிட்ஸ் பார்க் பள்ளி அருகே கடந்த 2-ஆம் தேதி இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையோரத்தில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தார்.

மூதாட்டியின் உடலை மீட்ட கிணத்துக்கடவு காவல்துறையினர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த மூதாட்டிக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டு கிணத்துக்கடவு காவல் நிலைய காவலர் செல்வகுமார் மூதாட்டியின் உடலுக்குப் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்தார்.
காவலர் செல்வகுமாரின் இந்த மனிதநேய செயலை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கண்டு, காவலர் செல்வகுமாரை நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இதேபோல், செல்வகுமாரின் மனிதநேயத்தை கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி, அருள் பிரகாஷ் உள்ளிட்ட காவலர்கள் பாராட்டினர்.