ஓராண்டுக்குப் பிறகு கோவை வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலா தங்கும் விடுதி இன்று முதல் அனுமதி.!!

கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா தங்கும் மையம் இன்று 06/09/2021 திங்கட்கிழமை முதல் மீண்டும் துவங்குகிறது என்று வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா தங்கும் மையம் இன்று 06/09/2021 திங்கட்கிழமை முதல் மீண்டும் துவங்குகிறது என்று வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்குட்பட்ட பரளிக்காடு, பூச்சிமரத்தூர் சூழல் சுற்றுலா மையங்கள் உள்ளது. இது வனத் துறையினரால் பழங்குடியின மக்களை வைத்து பழங்குடியின மக்கள் நலனுக்காக நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பரளிக்காடு- பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா மையங்கள் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டது. இந்த 2-சூழல் சுற்றுலா மையத்தை நம்பி அருகிலுள்ள பரளிக்காடு, பூச்சமரத்தூர், பில்லூர், நீராடி உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்களிலிருந்து பரிசல் ஓட்டிகள் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாகச் சூழல் சுற்றுலா மையங்கள் மூடப்பட்டது. தற்போது தமிழக அரசும் கோவை மாவட்ட நிர்வாகமும் கொரோனா பொது முடக்கத்திலிருந்து தளர்வுகள் அகற்றப்பட்டதையடுத்து, சூழல் சுற்றுலா மையத்தில் காரமடை வனத் துறையினர் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், பொது முடக்க காலத்தில் பல்வேறு புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

பணிகள் முடிவடைந்த நிலையில், முதல் கட்டமாக பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா தங்கும் மையம் இன்று திங்கட்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்க உள்ளதாக காரமடை வனச்சரகர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

இங்கு வருகிறவர்கள் coimbatorewilderness.com என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அங்குள்ள 3-தங்கும் விடுதிகளில் தலா 4-பேர் என்ற கணக்கில் 12-பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் வழக்கம் போல் இல்லாமல் தற்போது கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி 50-சதவீத சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். கிருமிநாசினி கொண்டு வர வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். சுற்றுலாப் பயணிகள் வெப்ப நிலையைக் கண்டறிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேற்கண்ட விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுது தான் சூழல் சுற்றுலா மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...