வால்பாறை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வன கோட்டத்தில், பொள்ளாச்சி, வால்பாறை, மானாமபள்ளி, டாப்சிலிப் உலாந்தி போன்ற நான்கு வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு நாய், மான்கள் போன்ற விலங்குகள் வாழ்ந்து வருகிறது.
ஆண்டுதோறும் வனத்துறை சார்பில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும். இதில் கோடைக்காலம் வன விலங்கு, குளிர்காலம் வன விலங்கு கணக்கெடுப்பு பணி என்று இரண்டு முறை வருடத்துக்கு நடை பெறும்.
இதில், தேசிய புலிகள் ஆணையம் மூலம் வன பகுதியில் புலிகள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளதா என்று கண்காணிக்கத் தானே இயங்கும் கேமரா மூலம் ஆய்வு செய்து தேசிய புலிகள் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்.

இந்த ஆண்டு புலிகள் கணக்கெடுப்பு பணி 2-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும். இதில் மானாம்பள்ளி வனச்சரகத்தில் உள்ள வன பகுதியை நேர்கோட்டுப் பாதைகள் அமைத்து, தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் கடந்த 2-ம் தேதி முதல் 25-நாட்களுக்கு நடைபெறுகிறது.
பொள்ளாச்சி உள்ளிட்ட 4-வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இது குறித்து வனத்துறையினர் அதிகாரிகள் ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி கள இயக்குநர் உத்தரவுப்படி, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதலின்படி வால்பாறை, மானாம்பள்ளி, ஆகிய இரண்டு வனச்சரகங்களில் தானியங்கி கேமரா மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 2-ம் தேதி முதல் வரும் 26-ம் தேதி வரை 25-நாட்கள் நடைபெறுகிறது.
கேமரா பொருத்திய நாளிலிருந்து 8-நாட்களுக்கு ஒருமுறை டேட்டா பெற்றுப் பதிவு செய்யப்படும். பின்னர் 25-நாள் கழித்து டேட்டாவை மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தனர்.

மானாம்பாள்ளி வனச்சரகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 80-இடங்களில் 160-தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்று தெரிவித்தனர்.