டாஸ்மார்க் ஊழியர்களின் கோரிக்கையை நடக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றக் கோரி பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.!!

கோவை: டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்திலேயே நிறைவேற்ற வலியுறுத்தி கோவையில் பாரதீய டாஸ்மாக் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்திலேயே நிறைவேற்ற வலியுறுத்தி கோவையில் பாரதீய டாஸ்மாக் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் பாரதீய டாஸ்மாக் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பீளமேடு டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது.

இதில், பாரதீய டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் வி.கே.டி.சுரேஷ் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட தலைவர் கோபால் மற்றும் அமைப்புச் செயலாளர் முருகேசன், மாநில துணை பொருளாளர் சண்முக வேல் மணிகண்டன், மாநில துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



ஆர்ப்பாட்டத்தில் கடந்த 18-ஆண்டுகளாக டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் மற்றும் அடிப்படை சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும், டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பாதுகாப்பு கருதி, பணி நேரத்தைப் பகல் 12-மணி முதல் இரவு 8-மணி வரை அமல்படுத்த வேண்டும். மேலும் சிறுசிறு காரணங்களுக்காகப் பணி நீக்கம் ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூபாய் 50-லட்சம் வழங்க வேண்டும் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதுகுறித்து பி.எம்.எஸ். மாநில செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றத் தமிழக அரசு முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். ஆர்ப்பாட்டத்தில், அருள் பிரதீப் குமார், கோவை மாவட்ட பாரதீய டாஸ்மாக் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சதீஸ்குமார், செல்வராஜ் உட்பட பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...