கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார்தாரரின் கருத்துக்கேட்பு பெட்டி -கோவை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவு.!!

கோவை :கோவை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார்தாரரின் கருத்துக்கேட்பு பெட்டி வைக்கப்பட்டது.


கோவை :கோவை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார்தாரரின் கருத்துக்கேட்பு பெட்டி வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புகார் தரும் நபர்களுக்கு காவல்துறை திருப்திகரமான பணிகள் செய்து தருகிறார்களா? என்பதைப் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில், காவல்நிலையங்களில் கருத்துக் கேட்பு பெட்டி வைக்கக் கோவை மாவட்ட எஸ்.பி.,செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார்தாரரின் கருத்துக்கேட்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

அதில் காவல் நிலையத்திற்குப் புகார் தர வரும் நபர்கள் மற்றும் வழக்கு சம்பந்தமாக காவல்துறை நடந்துகொள்ளும் விதங்கள் குறித்தும், காவலர்களின் பணிகள் திருப்திகரமாக இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்தும் கருத்துக் கேட்பு பெட்டியில் செலுத்த ஏதுவாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக் கேட்பு பெட்டி மாதம் ஒருமுறை திறக்கப்பட்டு எஸ்.பி.,செல்வநாகரத்தினம் மேற்பார்வையில் புகார்தாரரின் கருத்துகளை ஆராயப்படும் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...