கோவை: வால்பாறையில் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசு கல்வித்துறை அறிவுறுத்தலின் பெயரில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12ம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்குக் கொரோனா தொற்று வராமல் தடுத்திட பல்வேறு வழிபாட்டு முறைகள் அரசால் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இதன்படி, அனைத்து ஆசிரியர்களும், அலுவலர்களும் இரண்டு முறை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்களுக்குச் சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் உத்தரவின்பேரில், வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் வால்பாறையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் அலுவலர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அவர்களுடைய சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதேபோல் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.