கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் சாலையோரம் நின்றவர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பிச்சனூர் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (33). இவருக்கு வருகிற 9ம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடக்க உள்ளது.
இந்த நிலையில், திருமணத்திற்கு உறவினர்களை அழைக்க சக்திவேல் மற்றும் இவரது அண்ணன் வேலுச்சாமி (36). இருசக்கர வாகனத்தில் பிச்சனூர் பகுதியில் நேற்று மாலை பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இதனிடையே, கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது மழை பெய்ததால் இருசக்கர வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு மழைக்கு நனையாமல் இருக்க மலை கோர்ட் போட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, கோவை சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த சக்திவேல் மற்றும் வேலுச்சாமி மீது மோதியது. இதில் வேலுச்சாமியின் தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர், பலத்த காயமடைந்த வேலுசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் வழியிலேயே வேலுசாமி உயிரிழந்தார்.
இதுகுறித்து வேலுச்சாமியின் தம்பி சக்திவேல் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய கோவை உருமண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி(61) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.