கோவையில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளருக்கு சரமாரி கத்திக்குத்து - ஒருவர் கைது..!

கோவை: கோவையில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் கோல்டன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் என்பவரின் மகன் ராமமூர்த்தி (45). இவரது வீட்டில் ஜேக்கப் என்பவரின் மகன் மணிகண்டன் (21) என்பவர் குடியிருந்து வருகிறார்.

மணிகண்டன் கடந்த 11 மாதங்களாக வீட்டிற்கு வாடகை தரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை ராமமூர்த்தி கேட்டும் மணிகண்டன் சரியான பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், ராமமூர்த்தி மணிகண்டனிடம் பாக்கி உள்ள வாடகை தொகையை கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது, மணிகண்டன் குடிபோதையில் இருந்துள்ளார்.

இதையடுத்து, மணிகண்டன் வீட்டு உரிமையாளர் ராமமூர்த்தியை ஆபாச வார்த்தைகளால் பேசியதோடு தாக்கியுள்ளார்.

மேலும், தகராறு முற்றவே வீட்டு உரிமையாளர் ராமமூர்த்தியை மணிகண்டன் கத்தியால் குத்த முயன்றார். அப்போது, தடுக்க முயன்ற ராமமூர்த்திக்கு கைகளில் கத்திக்குத்து விழுந்தது.

இதில் காயமடைந்த ராமமூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து ராமமூர்த்தி செல்வபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...