கோவையில் அம்மாவையும் மகளையும் திருமணம் செய்த நபரை கிண்டல் செய்ததில் இருதரப்பினர் இடையே மோதல் - 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு!

கோவை: கோவையில் அம்மாவையும், மகளையும் திருமணம் செய்த நபரைக் கிண்டல் செய்ததால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனைவி உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் அம்மாவையும், மகளையும் திருமணம் செய்த நபரைக் கிண்டல் செய்ததால் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வெள்ளலூர் சுந்தராபுரம் அடுத்த பிள்ளையார்புரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை என்பவரின் மகன் இயேசுதாஸ் (36). இவர் சொந்தமாக டெம்போ வேன் வைத்து ஓட்டி வருகிறார்.

இந்நிலையில், ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்து விதவையாக இருந்த ரோஸி என்ற பெண்ணை 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். மேலும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, முதல் கணவருக்குப் பிறந்த ரோஸியின் ஒரே மகளையும் இயேசுதாஸ் திருமணம் செய்தார்.

இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இப்படி தாயையும் மகளையும் இயேசுதாஸ் திருமணம் செய்ததால் அப்பகுதியிலுள்ள சிலர் அடிக்கடி கிண்டல் செய்வது வழக்கமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், ஏசுதாஸ் நேற்று அவரது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் கணேஷ் என்பவர் குடிபோதையில் அங்கே நின்று கொண்டிருந்தார். இயேசுதாசை பார்த்து அம்மாவையும் மகளையும் திருமணம் செய்து உள்ளாய் என்று கூறி கிண்டல் செய்துள்ளார். இதை ஏசுதாஸ் தட்டிக் கேட்டுள்ளார்.

இதையடுத்து, இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் ஏசுதாஸ் வீட்டிற்கு சென்று விட்டார். ஆனாலும் பின்னால் தொடர்ந்து வந்த கணேஷ் வீட்டிற்கு வந்து ஏசுதாஸின் 2-வது மனைவியிடம் தகராறு செய்தார்.

மேலும், ஏசுதாஸின் இரண்டாவது மனைவியையும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அந்த பெண்ணை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதேசமயம், இயேசுதாஸ் மற்றும் அவரது இரண்டாவது மனைவியான ரோஸியின் மகளும் கணேஷ் மீது தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, சாவியால் தாக்கியதில் கணேஷுக்கு வயிற்றில் குத்துப் பட்டு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து கணேசும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், இது குறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பெயரில் யேசுதாஸ் மற்றும் கணேஷ் மீது போத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...