சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகம்.!! 4-மாதங்களுக்குப் பிறகு மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை இன்று தொடக்கம்.!!!

கோவை: நான்கு மாதங்கள் கழித்து இன்று மீண்டும் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குக் காலை 7:10 மணிக்கு மலை ரயில் புறப்பட்டுச் சென்றதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


கோவை: நான்கு மாதங்கள் கழித்து இன்று மீண்டும் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குக் காலை 7:10 மணிக்கு மலை ரயில் புறப்பட்டுச் சென்றதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகையும், பச்சைப் பசேல் என்று பரந்து விரிந்து கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் தேயிலை எஸ்டேட்டுகளை மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் கண்டு ரசித்து சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

130-ஆண்டுக்கு மேல் பழமைவாய்ந்த மலை ரயிலை யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மத்திய மாநில அரசுகளின் ஊரடங்கு காரணமாக மலை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஊரடங்கு தளர்வு காரணமாக இடையே இடையே மலை ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது கொரோனா அலை பரவல் காரணமாக 21.4.21ஆம் தேதி முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கொரோனா 2-வது அலைபரவல் குறைந்தது காரணமாகச் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே மலை ரயில் சேவை இன்று முதல் தொடங்கும் என்று அறிவிப்பு செய்தது.

இதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை இன்று தொடங்கியது. காலை முதலே மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் காலை7. 10 மணிக்கு அழகிய மலை ரயில் புறப்பட்டுச் சென்றது. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...