கோவை 9-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி,..! இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதி

கோவை: தமிழகம் முழுவதும் கடந்த 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12 மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு கொரொனா சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.



கோவை: தமிழகம் முழுவதும் கடந்த 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12 மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு கொரொனா சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் கொரொனா சோதனை நடத்தப்பட்டதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர்கள் 3 பேரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இன்று (6.9.21) அந்த பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துவதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுல்த்தான்பேட்டை அரசு உயர் நிலைப்பள்ளியில் 33 மாணவர்களுக்குச் சோதனை செய்ததில், மூன்று மாணவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது தெரியவந்ததை அடுத்து, அந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்களுக்குச் சுகாதாரத் துறையினர் இன்று கொரொனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.

தொற்று ஏற்பட்ட மாணவர்கள் 3 பேருக்கும் எவ்வித அறிகுறிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...