கோவை: கோயில்கள், வீடுகள், வீதிகளில் விநாயகர் சதுர்த்தி சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டாட அனுமதி வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழகம் உட்பட கோவையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் மனுக்களைப் பெற்று துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கொண்டிருந்தார்.

இந்த நிலையில், இந்து மக்கள் கட்சி தமிழகத்தைச் சேர்ந்த தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கோஷங்களை எழுப்பியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது ஆட்சியரிடம் ஒரு மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் கோவில்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் கரைக்க சதுர்த்தி விழா நடத்த அனுமதி வேண்டும். தமிழக அரசு நிபந்தனைகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி விழாவை நல்லபடியாக நடத்த முழு ஒத்துழைப்பு தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அதனால் தாங்கள் தயவு கூர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட அனுமதி வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.