அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது தூய்மைப் பணியாளர் ஐ.ஜி அலுவலகத்தில் பாலியல்  புகார்.

கோவை: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கோவிந்தம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சத்யா (31). இவர் நேற்று கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மேற்கு மண்டல ஐ.ஜி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.


கோவை: அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் பாலியல் தொல்லை தருவதாக இளம்பெண் ஒருவர் மேற்கு மண்டல ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சத்யா (31). இவர் நேற்று கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மேற்கு மண்டல ஐ.ஜி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

அந்த புகார் மனுவில் செங்கோட்டு பாளையம், சமய சங்கிலி ஊராட்சியில் தான் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறேன். அங்கு அ.தி.மு.க வைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஊராட்சி தலைவராக உள்ளார். இவர் எனக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வருகிறார். இதற்கு பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் டிரைவராக பணி புரிந்து வரும் முருகேசனின் மகன் சதீஷ் உடந்தையாக இருந்து வருகிறார். 

அவரது பாலியல் தொல்லை அத்துமீறி போகவே இது குறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தேன். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், ஊராட்சி தலைவரை இதுவரை கைது செய்யவில்லை. நான் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவர் முருகேசன் மற்றும் சதீஷ் ஆகியோர் என்னை அடித்து துன்புறுத்தினர்.

இதனால் பாதிக்கப்பட்ட நான் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் பள்ளிபாளையம் போலீசார் என்னிடம் வாக்குமூலம் பெற்று சென்றனர். 

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மருத்துவமனையிலிருந்து எனது வீட்டிற்கு நானும் எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணும் மொபட்டில் சென்று கொண்டிருந்த போது, சதீஷ் தான் ஓட்டி வரும் அரசு ஜீப்பை ஏற்றி எங்களை கொலை செய்ய முயன்றார். நாங்கள் உயிர் பிழைத்தோம்.

ஆனால், இது தொடர்பாக புகார் அளித்தும் பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனக்கு உரிய பாதுகாப்பு மற்றும் நீதி கிடைக்க வேண்டும், என்றுபாதிக்கப்பட்ட பெண் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...