கோவை: கடந்த மூன்று நாட்களாக கோவை டெக்ஸ்டூல் பாலத்தில் இருக்கக்கூடிய எல்.இ.டி மின் விளக்குகள் எரியாததால், பொதுமக்கள் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள டிவைடரில் மோதி கீழே விழுந்து எழுந்து செல்லும் காட்சி அரங்கேறி வருகிறது.
கோவை:இங்கே படத்தில் பார்க்க கூடிய காட்சிகள் அடர்ந்த காட்டுப் பகுதிக்கு செல்லும் வழி அல்ல. இதுகோவையின் மைய பகுதியான டெக்ஸ்டைல் பாலம் ஆகும்.
கடந்த மூன்று நாட்களாக டெக்ஸ்டூல் பாலத்தில் இருக்கக்கூடிய எல்.இ.டி மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள டிவைடரில் மோதி கீழே விழுந்து எழுந்து செல்லும் காட்சி அரங்கேறி வருகிறது.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சத்தியமங்கலம் சாலையின் மைய பகுதியில் அமைந்துள்ளது டெக்ஸ்டூல் பாலம். இங்கு மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை அரசு ஊழியர்கள்,தனியார் நிறுவனத்தில் வேலை செய்யக் கூடியவர்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அன்னூர், கோவில்பாளையம், சரவணம்பட்டி, கணபதி மணியகாரம்பாளையம் உட்பட பல்வேறு இடங்களுக்கு இந்த சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
மிகவும் பிரசித்தி பெற்ற தனியார் நிறுவனங்களான எல்.எம்.டபில்யூ (LMW), ரூட்ஸ் உட்பட பல்வேறு தனியார் நிறுவனங்களும் இப்பகுதிதியில் செல்லப்பட்டு வருகின்றனர். சுமார், 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை பார்த்துவருகின்றனர். மேலும், சிறு குறு தொழில் .தொழில் முனைவோர்கள் என தினசரி இப்பாலத்தை பல்வேறு தரப்பு மக்கள் கடந்து சென்றாக வேண்டும்.

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதி, கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இப்போது வரை இருளில் மூழ்கியுள்ளது. அப்பாலத்தில், பொருத்தப்பட்டுள்ள 20 -க்கும் மேற்பட்ட அதிக ஒளி பொருந்திய எல்.இ.டி விளக்குகள் முழுமையாக எரியாததே இதற்கு காரணம்.இதனால் அப்பகுதியில் வரும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் அவல நிலை ஏற்ப்பட்டுள்ளது.
பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், எதோ வனப்பகுதிக்குள் செல்லக்கூடிய உணர்வு ஏற்படுவதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.எனவே, இனியும் தாமதிக்காமல் சமந்தப்பட்ட மின்சார வாரிய அலுவலர்கள் இருட்டில் மூழ்கியுள்ள இந்த பாலத்தில் உள்ள மின்விளக்குகளை உடனே எரிய செய்ய வேண்டும், என்றுபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.