ஆடி காற்றால் தமிழகத்துக்கு அதிர்ஷ்டம்: இவ்வாண்டு 12,000-மில்லியன் யூனிட்டுக்கு அதிகமான மின்சாரம் கிடைக்கும்: இந்தியக் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் தகவல்.!!

கோவை: ஆடி காற்றால் தமிழகத்துக்கு அதிர்ஷ்டம், இவ்வாண்டு 12,000 மில்லியன் யூனிட்டுக்கு அதிகமான மின்சாரம் கிடைக்கும் என இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.


கோவை: ஆடி காற்றால் தமிழகத்துக்கு அதிர்ஷ்டம், இவ்வாண்டு 12,000 மில்லியன் யூனிட்டுக்கு அதிகமான மின்சாரம் கிடைக்கும் என இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகம் முழுவதும் 9-ஆயிரத்து 500-மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு உள்ளன.

ஆண்டுதோறும் மே கடைசியில் துவங்கி செப்டம்பர் வரை காற்றாலை மின் உற்பத்தி சீசன் ஆகும். இந்த ஆண்டு முன்கூட்டியே ஏப்ரல் முதல் வாரத்தில் காற்றாலை மின் உற்பத்தி சீசன் துவங்கியது. ஆடி மாதம் காற்றாலை மின் உற்பத்தித் துறையில் பீக் சீசன் எனப்படும்.

இந்த ஆண்டு ஆடி காற்று அதிகம் காணப்பட்ட காரணத்தால் மின் உற்பத்தியும் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் இதனால் இவ்வாண்டு முடிவில் மொத்த மின் உற்பத்தி-12,000 மில்லியன் யூனிட்டுக்கு அதிகமாக இருக்கும் என, காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(IWPA) தலைவர், கஸ்தூரிரங்கையன் கூறியதாவது:-



கடந்த ஆண்டு சீசனில் 10,000 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டது. இவ்வாண்டு ஆடி மாதத்தில் காற்று அதிகம் கை கொடுத்த காரணத்தால் சீசன் நிறைவடையும் போது மொத்தம் 12,000 மில்லியன் யூனிட்டுக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஆடி மாதத்தில் தமிழகத்தின் மொத்த மின் தேவையில் அதிக பங்களிப்பு காற்றாலைகள் கொண்டிருக்கும். இந்த ஆண்டும் கடந்த மாதத்தில் தமிழகத்தின் தினசரி மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு காற்றாலைகள் பங்களிப்பு செய்தன.

நாடு முழுவதும் மின் தேவை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் மரபுசாரா ஆற்றல் உற்பத்தித்துறைக்கு மத்திய, மாநில அரசுகள் அதிக முக்கியத்துவம் அளித்து செயல்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...