கோவை: குறிச்சியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைப்பெற்ற முப்பெரும் விழாவில் முன் களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி குறிச்சி பகுதி 97-வது டிவிசன் சார்பில் இன்று பெருந்தலைவர் காமராஜர், ராஜீவ் காந்தி, வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக கோவை மதுக்கரை சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் காளீஸ்வரன் தலைமையில், நடைபெற்ற முப்பெரும் விழாவில் துணைத்தலைவர் எட்டிமடை நந்தகுமார் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.
இதையடுத்து, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பகவதி கலந்துகொண்டு வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து முன் களப்பணியாளர்கள் மற்றும் நலிவடைந்த பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.

இந்த விழாவில், குறிச்சி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் முருகநாதன், 97-ஆவது டிவிஷன் தலைவர் எஸ்ரா, துணைத்தலைவர் அரிசிகடை சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.