கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது - ஆட்சியர் சமீரன் வழங்கினார்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது - ஆட்சியர் சமீரன் வழங்கினார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறப்பாக பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் இவ்விருது வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் 13-ஆசிரியர்களுக்கு இவ்விருதானது வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் ஆசிரியர்களுக்கு விருதினை வழங்கினார்.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஒண்டிப்புதூர், மேட்டுப்பாளையம், ஒத்தகால்மண்டபம், பிரஸ் காலனி, கல்வீரம்பாளையம் உள்ளிட்ட 13-பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 13-பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதுகளை வாங்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.