கோவை: பருத்தி மற்றும் பருத்தி கழிவு பஞ்சின் மீதான ஒரு சதவீத விவசாய சந்தை வரியை நீக்கிய தமிழக முதல்வர் அறிவிப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுக்கு சைமா நன்றி தெரிவித்துள்ளது.
கோவை: பருத்தி மற்றும் பருத்தி கழிவு பஞ்சின் மீதான ஒரு சதவீத விவசாய சந்தை வரியை நீக்கிய தமிழக முதல்வர் அறிவிப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுக்கு சைமா நன்றி தெரிவித்துள்ளது.
தமிழக விவசாய சந்தை வரி 1959-ம் ஆண்டிலிருந்து 0.5-சதவீதமாகப் பருத்தி மற்றும் பருத்தி கழிவு பஞ்சு மீது விதிக்கப்பட்டு வந்ததை, 1987-ம் ஆண்டு முதல் ஒரு சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு வசூலித்து வந்தது.
இந்த வரியானது, தமிழகத்தில் விளையும் பஞ்சிற்கு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வந்து தமிழகத்தில் இருப்பு வைத்து விற்கும் பஞ்சிற்கு விதிக்கப்பட்டு வருகிறது. கழிவு பஞ்சு, நூற்பாலைகளில் நூல் உற்பத்தி செய்யும் பொழுது, எடுக்கப்பட்டாலும் தமிழகத்தில் மட்டும் தான் இதற்கும் வரி விதிக்கப்பட்டு வந்தது.
இதனால், தமிழகத்தில், நாட்டின் 45-சதவீத உற்பத்தி கொள்ளவையும், சுமார் 80-சதவீத சிறு நூற்பாலைகளையும், சுமார் 50-சதவீத ரோட்டார்களை கொண்ட நூற்பாலைகளும் பாதிக்கப்பட்டு வந்தன. மேலும், தமிழகத்தில் உள்ள பருத்தி விவசாயிகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளா்கள், குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பருத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
தமிழகத்திலுள்ள நூற்பாலைகளுக்கு ஆண்டு ஒன்று 110-முதல் 120-இலட்சம் பேல்கள் (பேல் ஒன்றுக்கு 170-கிலோ) பருத்தி பஞ்சு தேவையில், சுமார் ஐந்து முதல் ஆறு இலட்சம் பருத்தி பஞ்சு பேல்களே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவதால், சுமார் 95-சதவீத பஞ்சை கிலோ ஒன்றுக்கு ரூ.2-முதல் ரூ.6-வரை வாடகை செலுத்தி வாங்குவதால், தமிழக நூற்பாலைகளின் போட்டி ஸ்திரன் குறைந்து வருகிறது.
மேலும், இதர மாநிலங்கள் பல்வேறு கூடுதல் சலுகைகளை வழங்குவதால், பருத்தி விவசாய சந்தை வரி தமிழக பருத்தி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒரு சுமையாக இருந்து வந்தது. கடந்த 35-ஆண்டுகளாக இந்த வரியை நீக்க கோரி தமிழக விவசாயிகளும், ஐவுளித்துறையினரும் மாநில அரசை கோரி வந்தனர். இன்று, தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின் இந்த நீண்டகால கோரிக்கையை ஏற்று சட்டசபையில் 110-விதியின் கீழ் தமிழகத்தில் நிலவி வரும் பருத்தி மற்றும் பருத்தி கழிவு பஞ்சின் மீதான ஒரு சதவீத வரி நீக்கத்தை அறிவித்து நடப்பு கூட்டத் தொடரிலேயே இதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இன்று தென்னிந்தியப் பஞ்சாலைகள் சங்கத்தில் நடைபெற்ற பத்திரிக்கயாளார் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய இந்திய ஜவுளி கூட்டமைப்பின் தலைவர், க.ராஜ்குமார் மற்றும் தென்னிந்தியப் பஞ்சாலைகள் சங்கத்தின் துணைத் தலைவா், ரவிசாம் ஆகியோர் கூட்டாக தமிழக முதல்வருகளுக்கு ஒட்டு மொத்த இந்திய ஜவுளித் தொழிலின் சார்பாகவும், தமிழக ஜவுளித் தொழிலின் சார்பாகவும், தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியாவிலேயே இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கொள்கை முடிவாகும் என்று பாராட்டினர். ஒரு சதவீத வரி நீக்கம் தமிழகத்தில் உள்ள சுமார் இரண்டு இலட்சம் பருத்தி விவசாயிகளுக்கு உடனடி பயன் ஏற்படுவதுடன், தமிழக பருத்தி உற்பத்தியை ஐந்து இலட்சம் பேல்களில் இருந்து 25-இலட்சம் ஒபேல்களாக 2030ம் ஆண்டிற்குள் உயர்த்திட பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு அமல்படுத்த இருக்கும் சூழ்நிலையில், சுமார் 10 இலட்சம் பருத்தி விவசாயிகள் வரை இதனால் பயனடைவர் என்று அவர்கள் கூறினார்கள். மேலும், இதனால் மாநிலத்தின் ஜி.எஸ்.டி.வரி பல மடங்காக உயரும் என்றும் கூறினார்கள்.
ராஜ்குமார் மற்றும் ரவிசாம் மேலும் கூறுகையில், இந்த வரி நீக்கத்தினால், தனியார் மற்றும் இந்திய பருத்திக் கழகம் தமிழகத்தில் கிடங்கில் பஞ்சை இருப்பு வைத்து அன்றாடம் சிறு மற்றும் குறு நூற்பாலைகளுக்கு விற்க முன்வருவர் என்றும், இதனால், இந்த நூற்பாலைகளின் நடப்பு மூலதனம் தேவை மற்றும் மூலப்பொருள் வாங்கும் நேரம் போன்றவை கணிசமாகக் குறைந்து போட்டி ஸ்திரன் அதிகரிக்கும் என்று கூறினர்.
ஒரு சதவீத பருத்தி கழிவு பஞ்சு வரி நீக்கம் ரோட்டார் நூற்பாலைகள், தங்களுக்குத் தேவையான கழிவு பஞ்சு முழுவதையும் தமிழகத்திலேயே வாங்க முடிவதால், மாநிலத்தின் ஜி.எஸ்.டி.வரி வருவாய் கணிசமாக உயரும். நாட்டிலேயே அதிகமான மதிப்பு கூடிய ஜவுளிப் பொருட்களை, தமிழக கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளாகள், கழிவு பஞ்சிலிருந்து தயாரிக்கப்பட்ட நூலிலிருந்து உற்பத்தி செய்வதால் (இப்பொருட்களுக்கு அதிக முக்கியத்துவத்தை அளிப்பதால்) பன்னாட்டு ஜவுளி விற்பனையாளர்கள் தமிழகத்திற்கு அதிக வியாபாரத்தைக் கொடுப்பார்கள்.
இதனால், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி விற்பனைகள் கணிசமாக உயரும். ஏற்கனவே, ஜவுளித் தொழிலில் புதிய மூலதனங்கள் செய்ய ஏதுவான மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்திற்கு இந்த முடிவு கூடுதல் பயனை அளிப்பதால் மேலும் அதிகமான புதிய மூலதனங்கள் ஏற்பட்டுப் பல இலட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படும் என்று ராஜ்குமார் மற்றும் ரவிசாம் கூறினார்கள்.