வால்பாறை: வால்பாறையில் காலை 7-மணி முதல் இரவு 7-மணி வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக சமூக விரோதிகள் இரவு நேரத்தில் இந்த பேருந்து நிலையத்தில் உட்புறம் மது அருந்துவதோடு கழிப்பறையாகவும் இரவு நேரத்தில் பயன்படுத்துகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் மத்தியில் அமைந்துள்ளது பழைய பேருந்து நிலையம். இங்கிருந்து பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர் மற்றும் வால்பாறை தேயிலை தோட்ட பகுதிகளுக்குப் பேருந்துகள் சென்று வந்தன.
மக்கள் தொகை அதிகம் வாகனப் பெருக்கம் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் காந்தி சிலை வளாகத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
தற்போது இந்த பேருந்து நிலையத்திலிருந்து அக்காமலை. கருமலை பாலாஜி கோயில் வெள்ளமலை டாப் ஊசிமலை. காஞ்சமலை ஆகிய பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இங்கு இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக சமூக விரோதிகள் இரவு நேரத்தில் இந்த பேருந்து நிலையத்தில் உட்புறம் மது அருந்துவதோடு கழிப்பறையாகவும் இரவு நேரத்தில் பயன்படுத்துகின்றனர்.

இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்தப் பேருந்து நிலையம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இருப்பதால் நகராட்சி சுகாதாரத் துறையினர் கண்டு கொள்வதில்லை. அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகமும் இதனை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர்.
பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் இந்த சுகாதாரமற்ற நிலையைக் கண்டு முகம் சுளித்த வண்ணம் உள்ளார்கள். மேலும் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் இரவு நேரங்களில் யாரும் உள்ளே செல்லாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கவும் பேருந்து நிலையத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும், நடவடிக்கை மேற்கொள்ளும்படி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.