அரசு அலுவலர்கள் குடும்பத்தாருக்குப் பாதுகாப்பு நிதியை ரூ.5-லட்சமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பொள்ளாச்சியில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் தீர்மானம்.!!

பொள்ளாச்சி: அரசு அலுவலர்கள் குடும்பத்தாருக்குப் பாதுகாப்பு நிதியை ரூ.5-லட்சமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பொள்ளாச்சியில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


பொள்ளாச்சி: அரசு அலுவலர்கள் குடும்பத்தாருக்குப் பாதுகாப்பு நிதியை ரூ.5-லட்சமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பொள்ளாச்சியில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்தின் புதிய வட்ட கிளை துவக்க விழா நிகழ்ச்சி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் சண்முகராஜன் தலைமை நடைபெற்ற கூட்டத்தில், தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ள மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தும், அரசு அலுவலர்கள் காலமானால் வழங்கப்படும் குடும்பப் பாதுகாப்பு நிதி ரூபாய் 5-லட்சமாக உயர்த்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களுக்கு சண்முகராஜா அளித்த பேட்டியின் போது, அரசாணை 72-ன் படி 2010-ஆம் ஆண்டுக்கு முன்னால் முதல்வர் கலைஞர் அறிவித்த திட்டமான பத்தாண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்தவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால் கடந்த ஆட்சியில் முழுமையாக அது நிறைவேற்றப்படவில்லை, மேலும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து 2003-ஆண்டுக்குப் பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். தொகுப்பூதிய பணியை அறவே நிறுத்தி விட்டு காலமுறை ஊதியத்தில் அனைத்து பணியாளர்களையும் நியமனம் செய்ய வேண்டும்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு அரசு அறிவித்த 25-லட்ச ரூபாய் நிதி உதவி, கொரோனோ தடுப்பு பணியில் ஈடுபட்டு இறந்த 430-அரசு ஊழியர்களின் வாரிசுதாரகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.

21-மாத ஊதிய நிலுவைத் தொகையும் ஏற்கனவே நிறுத்தப்பட்ட சரண்டர் விடுப்பு உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...