'ஸ்ரீராம் நாங்கள் உன்னைத் தேடி வருகிறோம் எங்கேயாவது இருந்தால் சத்தம் கொடு'.. வால்பாறையில் மருத்துவக் கல்லூரி மாணவரை 7-நாளாக தேடும் பணி தீவிரம்.!! பெற்றோர்கள் உறவினர்கள் ஆழ்ந்த சோகம்.!!

வால்பாறை: வால்பாறை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவரின் உடலை கண்டுபிடிக்கும் பணி ஏழாவது நாளாக நடைபெற்று வருகிறது. உடலை கண்டுபிடிக்க முடியாத நிலையில் பெற்றோர்கள் உறவினர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.


வால்பாறை: வால்பாறை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவரின் உடலை கண்டுபிடிக்கும் பணி ஏழாவது நாளாக நடைபெற்று வருகிறது. உடலை கண்டுபிடிக்க முடியாத நிலையில் பெற்றோர்கள் உறவினர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த திங்கட்கிழமை 30-ஆம் தேதி சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த கணேசன் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் ஸ்ரீராம் வயது (24).

கோவையில் தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்பில் 4-ஆண்டு படித்து வருகிறார். 30-ஆம் தேதி விடுமுறை நாள் என்பதால் தனது 5-நண்பர்களுடன் வால்பாறையைச் சுற்றிப் பார்க்க வந்தனர். வால்பாறையில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு சோலையார் அணைப் பகுதியில் மதியம் சுற்றிப் பார்த்துவிட்டு சேடல் அணை பகுதியில் ஒரு நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்பொழுது ஸ்ரீராமை தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டதாக நண்பர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். சேக்கள் முடி காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தண்ணீரில் நீந்திச் செல்லும் பொழுது தண்ணீர் அடித்து சென்று விட்டதாக நண்பர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்து தீ அணைப்பு துறையினர் தேடியும் ஸ்ரீராம் கண்டுபிடிக்க முடியவில்லை.

31-தேதி காலையிலிருந்து தேடி வந்தனர். 5-நாள் கழித்து வனத்துறையினர் பறக்கும் கேமராவை பயன்படுத்தித் தேடினர். மேலும் கேரளா பகுதியிலிருந்து, தண்ணீருக்குள் மூழ்கி உயிரை காப்பாற்றும் பயிற்சி பெற்ற நீர்மூழ்கி வீரர்களை வரவழைத்துத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தினர்.

அப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று 7-வது நாளாக தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் பொதுமக்கள் உதவியுடன் தேடி வருகின்றனர். பொதுவாக சோலையாறு அணை நிரம்பினால் மட்டுமே சேடல் அணையில் தண்ணீர் செல்லும்.

இந்த தண்ணீர் அடர்ந்த வனப்பகுதியில் சென்று, காடு மலை பகுதியில் சென்று பரம்பிக்குளம் அணைக்குச் செல்கிறது. சேடல் அணையிலிருந்து பரம்பிக்குளம் அணைக்கு சுமார் 15-கிலோமீட்டர் வனப்பகுதிக்குள் தண்ணீர் செல்கிறது.



உள்ளூர் மக்களும் ஆதிவாசி பழங்குடியினர் மக்களும் தண்ணீர் செல்லும் பாதையை நன்கு அறிந்திருப்பதால் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் உள்ளூர் மக்களின் உதவியை நாடி தண்ணீர் செல்லும் பாதையில் மக்கள் ஸ்ரீராம் உடலைத் தேடி வருகின்றனர்.



இதில் ஒலிபெருக்கி மூலம் ஸ்ரீராம் நாங்கள் உன்னைத் தேடி வருகிறோம் எங்கேயாவது இருந்தால் சத்தம் கொடு என்று ஒலிபெருக்கி மூலம் ஸ்ரீராமன் பெயர் அழைத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் தேடிவருகின்றனர்.

இந்த பணியில் ராஜ்குமார் செல்லையா ராஜமாணிக்கம், ரமேஷ், ராமர், சிவக்குமார், மதியழகன் போன்றவர்கள் தேடி வருகின்றனர். ஏழு நாட்கள் ஆகியும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவர் உடலை கண்டுபிடிக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களும் வனத்துறையினரும் காவல்துறையினரும் அதிகம் சிரமப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து ஸ்ரீராம் பெற்றோர்கள் உருக்கமான செய்தியை வாட்ஸ்அப் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். எனது மகன் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறான். முப்பதாம் தேதி வால்பாறையை சுற்றிப்பார்க்க நண்பர்களுடன் சென்று உள்ளார்.

சேடல் அணை பகுதியில் குளிக்கும்போது காணாமல் போய்விட்டான். அவன் நன்கு நீச்சல் தெரிந்தவர். அவனை வனப்பகுதிக்குள்ளும் பரம்பிக்குளம் அணை பகுதியில் பார்த்தால் காவல் துறைக்கு தகவல் கொடுங்கள் என்று ஒரு உருக்கமான ஒரு பதிவை இணையத்தில் பதிவு செய்து உள்ளனர். இதை பார்க்கும் போது காணாமல் போனவர் சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருவது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...