கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் கிராமப்புற சாலைகளின் தரம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற சாலைகள் மற்றும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.
இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் இன்று மாவட்ட ஆட்சியர் சமீரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதில், வடசித்தூர் கிராமத்தில், இருந்து பனப்பட்டி வரை ரூ.1 கோடியே 80 லட்சம் செலவில் போடப்பட்ட தார் சாலை தரம் குறித்து ஆய்வு செய்தார். இதேபோல, பொள்ளாச்சி தாளக்கரை பகுதியில் 80 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கிராமப்புற சாலைகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கவிதா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ், செயற்பொறியாளர் பசுபதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். தார் சாலையில் ஒரு சில பகுதிகளை வெட்டி எடுத்து ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதுபோல தார் சாலைகளில் அளவுகள் உள்ளதா என்று, ஆய்வு மேற்கொண்டார்.
இதேபோல, தாளக்கரை சமத்துவபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் 100 வீடுகளின் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கோவை மாவட்ட பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.