பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி..!

கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.


கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வன கோட்டத்தில், பொள்ளாச்சி, டாப்சிலிப் (உலாந்தி), மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளன.

இதனிடையே, ஆண்டுதோறும் வனத்துறை சார்பில் நேர்கோட்டு பாதைகள் அமைத்து, கோடைகாலம் மற்றும் குளிர் காலத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய அரசின் புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் உள்ள புலிகள் காப்பகத்தில் phase-4 புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.



இதன் அடிப்படையில், பொள்ளாச்சி வன கோட்டத்தில் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 2ம் தேதி முதல் 25 நாட்களுக்கு நடைபெறுகிறது. பொள்ளாச்சி உள்ளிட்ட 4 வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,‘‘ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி கள இயக்குநர் அவர்கள் உத்தரவுப்படி, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதலின்படி பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய நான்கு வனச்சரகங்களில் தானியங்கி கேமரா மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 2-ம் தேதி முதல் வரும் 26ம் தேதி வரை 25 நாட்கள் நடைபெறுகிறது.



பொள்ளாச்சி கோட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 294 இடங்களில் 588 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...