கோவை: கோவை கிணத்துக்கடவில் லோட்டஸ் அரிமா சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் லோட்டஸ் அரிமா சங்கம், KGVB அறக்கட்டளை, கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து LLJ திருமண மண்டபத்தில் இலவச கண் பரிசோதனை முகாமை இன்று நடத்தினர்.
இந்த இலவச கண் பரிசோதனை முகாமை கிணத்துக்கடவு ஒன்றிய குழு உறுப்பினர் LJJ.ஜெகன் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து பயன் பெற்றனர். மேலும், கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தவர்களை கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இலவசமாக செய்த தர ஏற்பாடு செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு லோட்டஸ் அரிமா சங்க தலைவர் கணேசன், செயலாளர் சந்திரராஜ், பொருளாளர் பிரபு ஆகியோர் இந்த முகாமிற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.