திருப்பூரில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் நடந்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல்!

திருப்பூர்: திருப்பூரில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் நடந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூரில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் நடந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான ஓவியப் போட்டி இணையவழியில் நடத்தப்பட்டது. அதில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு போட்டியாளரும் சிறப்பான முறையில் ஓவியங்கள் வரைந்து அனுப்பியிருந்தனர். இதில் ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றாற்போல் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி ஆகிய நான்கு பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக ஓவியம் வரைந்தவர்களுக்கு சுற்றுலாத்துறையின் சார்பாக சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.



இவ்விழாவிற்கு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வருகை புரிந்திருந்தனர். திருப்பூர் மாவட்ட சுற்றுலா தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் த.அரவிந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கியதுடன் அரசு வேலைவாய்ப்பு மற்றும் தனித்துவம் தொடர்பான தகவல்களை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும் இவ்விழாவில் திருப்பூர் டாக்ஸ் MKM கணேஷ் மற்றும் மகாசக்தி அறக்கட்டளை தலைவர் குளோபல் பூபதி மற்றும் உதவி சுற்றுலா அலுவலர் த. செல்வராஜு ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...