கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலைகள் வைத்து வழிபடுவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வால்பாறை தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் முன்னிலை வகித்தார்.
கொரானா தொற்றின் காரணமாக மத சார்பான ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
அதேசமயம், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் நீர்நிலையில் கரைப்பதற்கு அனுமதி இல்லாத நிலையில், பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து முன்னணி நகர பொதுச் செயலாளர் சேகர், ஜெயன், சுந்தர்ராஜ், பிரஸ் பாலன், பாரத் சேனா அமைப்பின் சார்பில் அன்பழகன், செல்வகுமார் உட்பட ஏராளமான அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.