வால்பாறையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - காவல்துறை நடவடிக்கை!

கோவை: வால்பாறையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டனர்.


கோவை: வால்பாறையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறைக்கு கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசால் சில கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. வால்பாறைக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணியாமலேயே வருகின்றனர். இதனால் வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் பாலாஜி தலைமையில் சாலையில் நடந்து செல்பவர்களை முகக் கவசம் கண்டிப்பாக அணிய வலியுறுத்தியும், வாகனங்களை தடுத்து நிறுத்தி பயணிகளிடம் முகக்கவசம் கட்டாயம் அணிய வற்புறுத்தி வருகின்றனர்.



மேலும், இதனை மீறுவோருக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையில் காவல் துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பங்கு பெற்றுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...