கோவை: கோவை சரவணம்பட்டி அருகே உள்ள எஸ்என்எஸ் பொறியியல் கல்லூரியில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (66). இவர் கடந்த 8 வருடமாக எஸ்என்எஸ் பொறியியல் கல்லூரியில் குடிநீர் சுத்திகரிப்பு ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், இவர் நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் தனது மனைவியின் தங்கை கணவரான உதயசூரியன் என்பவருடன் சேர்ந்து கழிவுநீரை சுத்திகரிக்கும் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, சுத்தம் செய்வதற்காக ஒரு தொட்டிக்குள் அழகர்சாமி இறங்கினார். மற்றொரு தொட்டிக்கு தண்ணீர் நிரப்ப உதயசூரியன் சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது தொட்டியில் அழகர்சாமி சடலமாக மிதந்தார்.
இதுகுறித்து உதயசூரியன் அளித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரடைப்பா அல்லது விஷவாயு தாக்கி இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.