திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் இடிந்து விழுந்து சேதம்.!! பாரில் குடிக்க அனுமதி இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு.!!

திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் இடிந்து விழுந்து சேதம் அடைந்ததில், பாரில் குடிக்க அனுமதி இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பபட்டது.


திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் இடிந்து விழுந்து சேதம் அடைந்ததில், பாரில் குடிக்க அனுமதி இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பபட்டது.

திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை(2262) செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை அருகே குமார் என்பவருக்கு சொந்தமான பார்(மதுபானகூடம்) செயல்பட்டு வருகிறது.

கொரோன நோய் தொற்று காரணமாகத் தமிழக அரசு டாஸ்மாக் பார்கள் இயங்குவதற்குத் தடை விதித்துள்ளது. இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று மதியம் தென்னம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடையை அருகே உள்ள டாஸ்மாக் பாரின் மேற்கூரை கனமழைக்குத் தாங்காமல் இடிந்து விழுந்தது.



டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பாரின் மேற்கூரையானது மரத்தால் செய்யப்பட்டு ஓடுகளால் வேயப்பட்டிருந்தது.

நீண்ட நாட்களாகச் செயல்படாமல் பராமரிப்பின்றி இருந்ததால் கனமழைக்குத் தாங்காமல் இடிந்து விழுந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பாரின் உள்ளே வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ், சமையல் உபகரணங்கள், குளிர்பானங்கள் ஆகியவை சேதமடைந்தது.

பாரில் மது அருந்த தமிழக அரசு தடை விதித்திருந்ததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...