மானாமதுரை அமமுக செய்தி தொடர்பாளருக்கு அரிவாள் வெட்டு வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் திருப்பூர் நீதிமன்றத்தில் சரண்.!!

திருப்பூர்: மானாமதுரை அமமுக செய்தி தொடர்பாளருக்கு அரிவாள் வெட்டு வழக்கில் குற்றவாளிகள் 4-பேர் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.


திருப்பூர்: மானாமதுரை அமமுக செய்தி தொடர்பாளருக்கு அரிவாள் வெட்டு வழக்கில் குற்றவாளிகள் 4-பேர் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தைச் சேர்ந்தவர் குருமுருகானந்தம்(40). மானாமதுரை கோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட போது டிடிவி தினகரன் பின்னால் சென்றார்.

மாநில வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளராகவும் செய்தி தொடர்பாளராகவும் பணியாற்றி வந்தார். மானாமதுரை கோர்ட் எதிரே இவரது சட்ட அலுவலகம் அமைந்துள்ளது.

நேற்று மதியம் அவரது அலுவலகத்திற்கு இரண்டு டூவிலர்களில் நான்கு நபர்கள் வந்துள்ளனர். இருவர் கண்காணிப்பு பணியில் இருக்க இருவர் மட்டும் இறங்கி அலுவலகத்தினுள் புகுந்து குருமுருகானந்தத்தை சராமாரியாக வெட்டிவிட்டு அவர்கள் வந்த டூவீலரில் தப்பியோடிவிட்டனர்.

தகவலறிந்து சிவகங்கை எஸ்பி செந்தில்குமார், டிஎஸ்பி சுந்தரமாணிக்கம் ஆகியோர் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

பலத்த காயமடைந்த குருமுருகானந்தம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

அச்சம்பவத்திலும் சரவணன் தரப்பில் குருமுருக்கானந்தம் ஆஜரானார். மானாமதுரை கோர்ட் எதிரே நடந்த கொலை சம்பவத்திலும் குற்றவாளிகளுக்கு எதிராக ஆஜரானார்.

இது போன்ற பல்வேறு குற்ற வழக்குகளில் ஆஜரானதால் கூலிப்படையை வைத்து கொலை செய்ய முயற்சித்திருக்கலாம் என கருதப்படுகிறது. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் எண் -3ல் 4 பேர் ஆஜராகினர். அதிபதிராஜா(23), தினேஷ்குமார்(22), ராஜாமருது(22) மற்றும் அலெக்ஸ்பாண்டியன்(21) ஆகியோர் இந்த வழக்கில் எங்களை தேடுவதால், உயிர் பாதுகாப்புக் கோரி நீதிபதி சூர்யபிரபா முன்னிலையில் சரணடைந்தனர்.

இதையடுத்து இவர்களைத் திருப்பூர் சிறைக்கு போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அப்போது வழக்கறிஞர்களுக்குப் பாதுகாப்பு கொடு, வழக்கறிஞர்களைத் தாக்கியவர்கள் மீது குண்டர் சட்டத்தின் நடவடிக்கை எடு என வழக்கறிஞர்கள் பலர் முழக்கங்கள் எழுப்பியதால் நீதிமன்ற வளாகத்தில் சலசலப்பு எழுந்தது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...