பொள்ளாச்சி: திருமண மண்டபங்களில் விதி மீறும் வாடிக்கையாளர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் திருமண மண்டப உரிமையாளர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் இடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வரும் நிலையில், பல்வேறு துறைகளுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமண மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகளுக்கு 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் விதி மீறும் பட்சத்தில் மண்டப உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக இன்று திருமண மண்டப உதவியாளர்கள் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பல்வேறு நிதி நெருக்கடியில் மண்டப உரிமையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர்கள் விதி மீறல்களில் ஈடுபடும் போது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், மண்டப உரிமையாளர்களுக்கு அரசு அபராதம் விதித்து வருவது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தவர்கள்.
இதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும், மற்ற துறைகளுக்கு அளித்தது போல 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்க திருமண மண்டபங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.