பொள்ளாச்சி அருகே கிராமங்களில் 10-ஆண்டுகளாகக் காலமாகப் பராமரிப்பு இல்லாததால் இடிந்து விழும் தொகுப்பு வீடுகள்: புதுப்பித்துத் தரத் தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கை.!!!

கோவை: பொள்ளாச்சி அருகே கிராமங்களில் 10-ஆண்டுகளாகக் காலமாகப் பராமரிப்பு இல்லாததால் இடிந்து விழும் தொகுப்பு வீடுகள்: புதுப்பித்துத் தரத் தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே கிராமங்களில் 10-ஆண்டுகளாகக் காலமாகப் பராமரிப்பு இல்லாததால் இடிந்து விழும் தொகுப்பு வீடுகள்: புதுப்பித்துத் தரத் தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் உள்ள ரங்க சமுத்திரம், வஞ்சியாபுரம், ஆவல் சின்னம்பளையம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, 90 தொகுப்பு வீடுகள் அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்டது.

தற்போது, அங்கு அனைத்து வீடுகளிலும் காங்கிரீட் கூரைகள் பெயர்ந்து விழுந்து வருவதால், வீடுகளுக்குள் இருக்கப் பயந்து பலர் வீடுகளுக்கு முன்பு குடிசை அமைத்து ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரங்க சமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு தொகுப்பு வீடு முற்றிலுமாக இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு உயிர்ச் சேதம் ஏற்படவில்லை.

ரங்கசமுதிரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொகுப்பு வீடுகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளதால், ஏழை எளிய பொதுமக்கள் தங்கும் இடம் இன்றி தவித்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக இது குறித்து, பல அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.



வீடுகள் இடிந்து விழுவதால் உயிர் பயத்தில் வாழ்ந்து வருவதாகவும், தற்போது இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொது மக்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...