கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் அருகே கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்சில் ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது.

கோவை மாவட்டம் போத்தனூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வசிக்கும் சித்ரா (21) என்ற பெண்ணுக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு அழைப்பு விடுத்தனர். பின்னர் விரைந்து அங்கு சென்ற 108 பணியாளர்கள் பிரசவ வலியால் துடித்த பெண்ணை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர்.
ஆனால் அந்த பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டதால், அவசரம் உணர்ந்து பைலட் ஆதிலிங்கம் மற்றும் ஸ்டீபன், ஆகியோர் அந்த பெண்ணிற்கு ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில், அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
தொடர்ந்து, தாய்க்கும்,குழந்தைக்கும் முதலுதவி கொடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவசரத்தை உணர்ந்து, வலியால் துடித்த பெண்ணிற்குப் பிரசவம் பார்த்த 108 மருத்துவ உதவியாளர்களுக்கு பாராட்டு குவிகிறது.