கோவை: கோவையில் குறிப்பிட்ட சில இடங்களில் சனி, ஞாயிறு கடைகள் இயங்க தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும் பால், மருந்தகம், மளிகை கடைகள், காய்கறி கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை (ராயல் நகர் சந்திப்பு), ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை (திருச்சி ரோடு), ஹோப் காலேஜ் சிக்னல் கடைகள் (அவினாசி ரோடு), காளப்பட்டி ரோடு (நேரு நகர்), டி.பி.ரோடு, திருவேங்கடசாமி ரோடு, என்.எஸ்.ஆர்.ரோடு, ஆரோக்கிய சாமி ரோடு (கிழக்கு, மேற்கு கடைகள்), சரவணம்பட்டி சந்திப்பு, கணபதி பேருந்து நிலைய சந்திப்பு, துடியலூர் சந்திப்பு மார்கெட்டு கடைகள், பீளமேடு ரொட்டி கடை மைதான கடைகள், காந்திமாநகர் சந்திப்பு, ஆவாரம்பாளையம் சந்திப்பு, பாரதி நகர் (கணபதி), பாப்பநாயக்கன்பாளையம் சந்திப்பு, ராஜ வீதி, பெரிய கடை வீதி, வெரைட்டி ஹால் வீதி, என்.எச.ரோடு, இடையர் வீதி, வைசியாள் வீதி, தாமஸ் வீதி, சுக்கிரவாரபேட்டை வீதி, மரக்கடை வீதி, ரங்கே கவுண்டர் வீதி, காந்திபுரம் 1 முதல் 11 வரையிலான தெருக்கள் மற்றும் சல்லீவன் வீதி ஆகிய தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் அத்தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், மளிகை கடைகள், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
அதே போல் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நகைகடைகள் மற்றும் துணிகடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும், பேக்கரிகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. முன்னதாக காலை 8 மணிக்கு முதல் இயங்க அனுமதிக்க அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உணவக உரிமையாளர்கள் கோரிக்கை ஏற்று நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.