கோவை அரசு மருத்துவமனை வாசலில் கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!!

கோவை: கோவை அரசு மருத்துவமனை வாசலில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.


கோவை: கோவை அரசு மருத்துவமனை வாசலில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான் 30, இவர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரிடம் கோவை அரசு மருத்துவமனை முன் கத்தியைக் காட்டி மிரட்டி 2000 ரூபாய் பறித்தார்.

இந்த வழக்கில் முஜிபூர் ரகுமானை ரேஸ்கோர்ஸ் காவல்துறை கைது செய்தனர். இவரைக் கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

இவர் மீது கோவை நகரில் பல்வேறு வழக்குகள் இருக்கிறது. கொலை கொள்ளை பொதுமக்களிடம் நகரில் கத்தியைக் காட்டி பல இடங்களில் அடாவடி செய்து ரவுடியாக வலம் வந்து இருப்பதாகத் தெரியவந்தது.

இவரைக் குண்டர் சட்டத்தில் அடைக்கக் கோவை மாநகர காவல்துறை ஆணையர் தீபக் தாமோர் உத்தரவிட்டார். அதன்படி குண்டர் சட்டத்தின் படி நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவு நேற்று அவருக்குச் சிறையில் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...