மறைந்த அனிதாவின் நான்காமாண்டு நினைவேந்தல் மற்றும் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு.!! தி.மு.க சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் பங்கேற்பு.!!

கோவை: நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வு அரியலூரில் நடைபெற்றது.


கோவை: நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வு அரியலூரில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

"அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூரைச் சேர்ந்த நீட் எதிர்ப்பு போராளி சகோதரி அனிதாவின் நான்காமாண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டேன். சகோதரி அனிதாவின் தந்தை, அவரது சகோதரர் முனிரத்னம் மற்றும் அவரது மகள் பிரியங்கா ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர். சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் காரணத்தால் இந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான S.S.சிவசங்கர் கலந்துகொள்ள இயலவில்லை.



இந்த நிகழ்வில் முன்னிலை வகித்து அனிதாவின் நினைவாகக் கட்டப்பட்டுள்ள நூலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தேன். நீட் நுழைவுத் தேர்வால் தமிழ்நாட்டில் இனி இது போன்ற அநீதி என்றும் நடைபெறாமல் இருக்க செயலாற்ற வேண்டும் என்ற உறுதிமொழியினை ஏற்றோம்.

சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படும் நீட் தேர்வை நடத்தி சாமானியர்களின் மருத்துவக்கனவை சிதைத்து வருகிறது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு அதற்கு துணை போன எடப்பாடி பழனிசாமி அரசு கடந்த 2016 முதல் ஏழைக்குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு பெரும் துரோகத்தை இழைத்தனர். அதனை சீர் செய்யும் முயற்சியைத் தான் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.



தற்போது குழுமூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் ஆகியவற்றைத் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதன் கரைகளில் ஒரே நாளில் ஒரு லட்சம் பனை விதைகளை நடும் நிகழ்வினைத் தொடங்கி வைத்தேன்.

சுற்றுச்சூழலைக் காக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களையும், நடவடிக்கைகளையும் எடுத்துவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு துணை நிற்கும் விதமாக இந்த நிகழ்வு அமைந்தது. தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 33% காடுகளாக இருக்க வேண்டும், பனை மரங்களை வெட்ட இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற வேண்டும், மாவட்டந்தோறும் மரங்களை வெட்டுவதைக் கண்காணிக்க ஒரு குழுவை நியமித்து, அந்தக் குழுவின் அனுமதி பெற்ற பிறகே பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்ட முடியும்.

விவசாயிகளையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் சேலம் சென்னை 8 வழிச்சாலை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகளைத் திறம்படக் கையாண்டு ஆட்சியின் முதல் 100 நாட்களில் பல நூறு சாதனைகளைச் செய்து வரும் முதல்வர் கரங்களை நாம் வலுப்படுத்துவாம் என்று அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இந்த நிகழ்விற்கு வருகை தந்த செந்துறை வடக்கு ஒன்றியச் செயலாளர் ஞானமூர்த்தி முருகேசன், காங்கிரஸ் மாவட்டத்துணைத்தலைவர் பெ.பன்னீர் செல்வம், வடக்கு ஒன்றியத் துணைச்செயலாளர் எழில்மாறன், செந்துறை தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் பூ.காளமேகம், திராவிடர் கழகத்தை சேர்ந்த மருவத்தூர் செந்தில், CPM மாவட்டச்செயலாளர் தோழர் மணிவேல், வட்டச் செயலாளர் தோழர் கந்தசாமி, காக்கை அறக்கட்டளை வீ. மணிகண்டன், தமிழ்நாடு கள் கூட்டமைப்பு, நல்ல உணவு அறக்கட்டளை, உள்ளுர் திமுக நிர்வாகிகள், மற்றும் ஊர்ப்பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வந்திருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதே போன்று சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் உசிலம்பட்டி அருண் அவர்களுக்கும், சுற்றுச்சூழல் அணியை சார்ந்த மற்ற நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்"

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...