SBI-நடத்தும் லோன் மேளா.. உடனே நிறுத்த கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!!

கோவை: கோவையில் உரிய அனுமதி பெறாமல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி நடத்திய லோன்மேளா நிகழ்ச்சிகளை நிறுத்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவையில் உரிய அனுமதி பெறாமல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி நடத்திய லோன்மேளா நிகழ்ச்சிகளை நிறுத்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாகத் தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 200ஆக இருந்துவரும் நிலையில், கோவை மாவட்டத்திற்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொது நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை எஸ்.பி.ஐ வங்கி சார்பாக லோன் மேளா நடத்தப்படுவதாகச் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யப்பட்டது.



அதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, காலை முதல் லோன்மேளா நடைபெற்று வந்தது.



இந்த நிகழ்ச்சியானது மாவட்ட நிர்வாகத்திடம் எந்த அனுமதியும் பெறாமல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக லோன் மேளாவை நிறுத்த வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காவல்துறை மூலம் அந்த அரங்குகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். அதிகரித்து வந்த கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், முறையான அனுமதி பெறாமல் வங்கியில் லோன் மேலா நடத்தப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...