கோவை: கிணத்துக்கடவு அருகே கல்குவாரியால் விவசாயம் பாதிப்பு என புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொள்ளாச்சி சார்-ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தநாயக்கனூர் கிராமத்தில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த தீலிப் என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார்.
கடந்த ஒரு வருடங்களாகச் செயல்பட்டு வரும் கல்குவாரியால் அருகில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதோடு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகளில் தண்ணீர் ஊற்று இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் கல்குவாரியில் வெடி வைக்கும் போது அருகில் உள்ள வீட்டு சுவர்களில் பிளவு ஏற்படுவதால் கல்குவாரியை இயக்க தடைவிதிக்க வலியுறுத்தி அப்பகுதியை மக்கள் நேற்று கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் விவசாயிகள் புகார் தெரிவிக்கும் கல்குவாரியைப் பொள்ளாச்சி சார்-ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், கல்குவாரி உரிமையாளரிடம் விசாரனை மேற்கொண்டு, ஆவணங்களை சரிபாத்தார்.
இதையடுத்து விசாரனை முடியும் வரை கல்குவாரியை இயக்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வில் கிணத்துக்கடவு வட்டாச்சியர் சசிரேகா, கிணத்துக்கடவு காவல்நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் மதுகண்ணன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.